முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் நிலச்சரிவு: பலி 19 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      உலகம்
China 2023-06-05

Source: provided

பெய்ஜிங் : சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலச்சரிவு லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான வன நிர்வாகப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு உபகரணங்கள் பயன்படுத்தி மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. வனப்­ப­கு­தி­களை அதி­க­மா­கக் கொண்ட சீச்­சு­வான் மாகாணத்தில் அடிக்­கடி இயற்­கைப் பேரி­டர்­கள் நிகழ்­ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 4 days 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 hours ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 hours ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து