முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைக்க தடை: மீறினால் அபராதம் - சிறை: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      தமிழகம்
Jaill 20221 01 04

சென்னை, தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி கோவை அருகே, கருமத்தம்பட்டியில், ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, "அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதும், அடித்தளம் பகுதி முறையாக பராமரிக்கப்படாததுமே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம்" என்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனங்கள் ,தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ஐந்தாயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க வழிவகை செய்யப்படும். அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும். உரிமக் காலம் முடிந்தும் பேனர்களை அகற்றாவிட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடந்து காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்குவது சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது தனி நபரின் பொறுப்பே என்று நகராட்சி நிர்வாகத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து நேற்று (ஜூன் 9) கோவை மாவட்டம் பீளமேட்டில் அவினாசி சாலையில் சட்டத்தை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து