முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? - பள்ளி கல்வித்துறை விளக்கம்

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : தமிழகத்தில் 11 -ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள். 

இந்நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது. நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்பட்டது. 

அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தினால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்கு சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் கல்வித்துறை யோசித்திருக்கலாம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து