முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போருக்கு இடையில் உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷ்யர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      உலகம்
Ukraine 2023-09-17

Source: provided

மாஸ்கோ : உடமைகளை இழந்து அகதிகளாக வரும் உக்ரைன் மக்களுக்கு உதவி வரும் ரஷ்ய மக்களின் மனிதநேயம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 

2022 பிப்ரவரியில் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. ரஷ்யாவில் இப்போர் குறித்து ரஷ்யாவையோ, அதிபர் புடினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷ்ய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷ்யாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். ராணுவ தாக்குதல் காரணமாக ரஷ்யாவிற்கோ அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். 

தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷ்ய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர். 

இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷ்ய பெண்மணி தெரிவித்தார். 

எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும் என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷ்ய பெண் கூறினார். 2022 டிசம்பர் மாதமே ரஷ்யாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து