முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயது ஒரு பொருட்டல்ல, திறமைதான் முக்கியம்: அதிபர் ஜோ பைடன் குறித்து டிரம்ப் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      உலகம்
Joe-Biden-Trump 2023-09-17

Source: provided

வாஷிங்டன் : வயது ஒரு பொருட்டல்ல, திறமைதான் முக்கியம் என்று அதிபர் ஜோ பைடன் குறித்து முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் (77) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) ஆகியோர் களத்தில் உள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பைடன் 82 வயதை நெருங்குவார் என்பதும் டிரம்ப் 78 வயதை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அமெரிக்காவில் வாக்காளர்களிடம் ஆங்காங்கே நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் பேட்டி காணப்படும் 3 பேரில் ஒருவர், ஜோ பைடனின் அதிக வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது. 

ஜோ பைடன் மிகவும் வயதானவராகி விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்பதவிக்கு திறனில்லாதவர். அதுதான் மிக பெரிய பிரச்சனை என நான் நினைக்கிறேன். எனது பெற்றோர் நீண்ட வயது உயிர் வாழ்ந்தனர். எனது மரபணுவில் அது உள்ளது. எனவே நான் வயதை ஒரு பொருட்டாக கருதவில்லை என இது குறித்து ஒரு பேட்டியில்  டிரம்ப் கூறியுள்ளார். இரண்டு போட்டியாளர்களும் மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து