முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெய்ன்ரிச் கிளாசன் 83 பந்தில் 174 ரன் விளாசல் - ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      விளையாட்டு
South-Africa 2023-09-17

Source: provided

செஞ்சுரியன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன் ஹெய்ன்ரிச் கிளாசன் 83 பந்துகளில் 174 ரன்கள் விளாசி மிரளச் செய்தார்.

செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 416 ரன்கள் குவித்தது. ஹெய்ன்ரிச் கிளாசன் 83 பந்துகளில், 13 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன 174 ரன்கள் விளாசி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை மிரளச்செய்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டேவிட் மில்லர் 45 பந்துகளில், 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன 82 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக ரேஸா ஹெண்ட்ரிக்ஸ் 28, குவிண்டன் டி காக் 45, எய்டன் மார்க்ரம் 8, ராஸி வான் டெர் டஸ்ஸன் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 417 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 77 பந்துகளில், 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் சேர்த்தார்.

டேவிட் வார்னர் 12, டிராவிஸ் ஹெட் 17, மிட்செல் மார்ஷ் 6, மார்னஷ் லபுஷேன் 20, மார்கஸ் ஸ்டாயினிஸ் 18, டிம் டேவிட் 35, மைக்கேல் நேசர் 3, நேதன் எலிஸ் 18, ஆடம் ஸம்பா 9 ரன்களில் நடையை கட்டினர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் லுங்கி நிகிடி 4, காகிசோ ரபாடா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து