முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கியில் டெஸ்லா கார் தொழிற்சாலை: எலான் மஸ்க்- எர்கோடன் பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      உலகம்
Elon-Musk-Ergoden 2023-09-1

Source: provided

அங்காரா : துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து எலான் மஸ்க், அதிபர் எர்டோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக, துருக்கி அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, துருக்கி அதிபர் அலுவலகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வரவேற்பதாக எலான் மஸ்க் இடம் எர்டோகன் தெரிவித்தார் என எர்டோகன் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்போது ஸ்டார்லிங் வழங்க பாதுகாப்பு தொடர்பாக உரிமத்தை பெற ஸ்பேஸ்எக்ஸ் விரும்புவதாக மஸ்க் தெரிவித்துள்ளார். 

இந்த பேச்சுவார்த்தையின்போது எலான் மஸ்க் தனது மகனை கையில் வைத்திருந்தது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. டெஸ்லாவின் முதலீட்டிற்கான மிகவும் முக்கியமான நாடுகளில் துருக்கியும் ஒன்று என மஸ்க் தெரிவித்ததாக, துருக்கி தொழில் துறை மற்றும் டெக்னாலாஜி அமைச்சர் மெஹ்மெட் பதிக் கசிர் தெரிவித்துள்ளா். இருவரும் துருக்கியின் ஆயுதமேந்திய வான்வழி டிரோன் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து