முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் கூட்டணி இப்போதைக்கு இல்லை:தேர்தல் வரும் போதுதான் முடிவு செய்ய முடியும்: ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      தமிழகம்
Jayakumar 2023 04 15

Source: provided

சென்னை : பா.ஜ.க.வுடன் கூட்டணி இப்போதைக்கு இல்லை. தேர்தல் வரும் போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கூட்டணி தர்மத்தை மீறி பேசும் எந்தவொரு கருத்தையும் தன்மானம் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும். அண்ணாமலைக்கு தகுதி மீறிய பதவி. அரசியல் கட்சி தலைவருக்கான தகுதி இல்லை.

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு, அண்ணாமலை பெரியார் பற்றி பேசுகிறார். பெரியாரை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அம்மாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. 

கூட்டணி கட்சியை விமர்சனம் செய்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைத்தால், அ.தி.மு.க. தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு கருத்து தெரிவித்தால், ஓராயிரம் பதிலடி கொடுக்கப்படும். 

கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேசி வருகிறார்கள். இதை நிறுத்துங்கள் என மேலிடத்தில் அறிவித்து விட்டோம். பா.ஜனதா தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். 

ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. பா.ஜனதா இங்கே கால் ஊன்றவே முடியாது. அப்படிப்பட்ட நிலைமை. உங்களது(பா.ஜ.க.) வாக்கு வங்கிகள் எங்களுக்குத் தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளம். 

தேர்தல் வரும் போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். கூட்டணி இப்போதைக்கு இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இது தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் முடிவைதான் தெரிவிப்பேன். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து