முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., இரு அவைகளிலும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமருக்கு பாராட்டு

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      இந்தியா
Om-Birla 2023 07 25

Source: provided

புதுடில்லி : பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஜி-20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

நேற்று (செப்.,18) முதல் செப்.,22 வரை பார்லி., சிறப்பு கூட்டம் நடைபெறகிறது. முதல் நாளான நேற்று தேசிய கீதம் இசைக்கப்பட்ட அவை நடவடிக்கைகள் துவங்கின. அப்போது லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். பின்னர் ஓம் பிர்லா பேசியதாவது: இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்குமான இணைப்பு பாலமாக இந்தியா விளங்குகிறது.

ஜி20 மாநாட்டை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதற்காக ஒவ்வொரு இந்தியரையும் பாராட்ட விரும்புகிறேன். இம்மாநாட்டை நாட்டு மக்களுக்கு அர்பணிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கும் பாராட்டுகள். ஜி20 மாநாடு மூலம் இந்தியாவின் புகழ் உலக அரங்கில் மேலும் உயர்ந்துள்ளது. மாற்றத்திற்கான முக்கிய முடிவுகள் ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்டன. ஜி20 மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். உலகளவில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ராஜ்யசபாவிலும், அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து