முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: என்.ஆர்.காங். கூட்டணி தொடரும் : புதுச்சேரி அ.தி.மு.க. அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      இந்தியா
Pudhucherry-2023-03-23

Source: provided

புதுச்சேரி : பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று புதுச்சேரி அ.தி.மு.க. மாநிலச் செயலர் அன்பழகன் தெரிவித்தார். 

புதுச்சேரி அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது தகுதி, வயதை, அனுபவம் எதையும் புரிந்து கொள்ளாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணி கட்சி என நினைக்காமல் கட்சியின் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வதை புதுச்சேரி மாநில அ.தி.மு.க. கண்டிக்கிறது. 

மலிவு விளம்பரத்துக்காக பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி அண்ணாமலை அவ்வப்போது விமர்சனம் செய்கிறார். இது இந்திய நாட்டின் பிரதமராக மோடி வரக் கூடாது என்ற அண்ணமாலையின் சதி செயலாக உள்ளது.

தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக செயல்பட கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை. அவர் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். 

அண்ணாமலை புதுவைக்கு வரும் போது அ.தி.மு.க. பதிலடி தரும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறும். 

அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலேயே பா.ஜ.க. என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். கர்நாடகத்தில் இருந்த பா.ஜ.க. தனது ஆட்சியை தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையால்தான் இழந்தது என்பதை பா.ஜ.க. தலைவர்கள் உணர வேண்டும். அண்ணாமலையை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டோம். பா.ஜ.க.வால் தான் புதுச்சேரியில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. 

என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும், பேரவைத் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்க அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குதான் காரணம் என்பதை பா.ஜ.க. மறந்து விடக்கூடாது. 

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு புதுவைக்கும் பொருந்தும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையேற்றுள்ளார். எங்களை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரசுடன் எங்கள் கூட்டணி தொடரும். கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவின்படி புதுச்சேரி அ.தி.மு.க. செயல்படும். எங்கள் தலைமை பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்துள்ளது. அது மிக்க சந்தோஷமான செய்தியாகும். அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு  அன்பழகன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து