முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜேவியர் மிலே

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      உலகம்
Argentina 2023-11-22

பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் மிலே 55.8 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அர்ஜென்டினாவில் அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், அங்கு அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று போட்டி கடந்த மாதம் 22-ம் தேதியும், 2-வது சுற்று போட்டி நேற்று முன்தினமும் நடந்து முடிந்தன.

தற்போதைய ஆட்சியில் பொருளாதாரத் துறை அமைச்சராக உள்ள செர்ஜியோ மாசா ரினீயூவல் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுதந்திர கட்சியின் சார்பில் ஜேவியர் மிலே களம் இறங்கினார். தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் அரசு துறைகளின் எண்ணிக்கையைக் குறைத்து பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதாகவும் உறுதியளித்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜேவியர் மிலே 55.8 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொருளாதார அமைச்சரான செர்ஜியோ 44.2 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார். 

ஜேவியரின் வெற்றி, அர்ஜென்டினா 1983-ம் ஆண்டு ஜனநாயக நாடாக மாறிய பிறகு, நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளையும் மீறிய மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து