முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 4.23 லட்சம் இலவச டிக்கெட்: 9 இடங்களில் வழங்க ஏற்பாடு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரினத்திற்காக 4.23 லட்சம் இலவச டிக்கெட்டுகள் 9 இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  

இது குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது :-

வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23-ம்  தேதி முதல் ஜனவரி 1-ம்  தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் சிரமம் இன்றி விரைவாக தரிசனம் செய்வதற்காக 2.25 லட்சம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க டிசம்பர் மாதம் 22-ம்  தேதி முதல் ஜனவரி 1-ம்  தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மையங்களில் வழங்கப்பட உள்ளது.

காலை 6 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நித்திய அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது. 

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார், தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்த உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து