முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மற்ற நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது: பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      உலகம்
Modi-1 2023-12-01

Source: provided

துபாய் : இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது என்றும், இது சர்வதேச நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியீடு மிக குறைவு என்றும்  பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை துபாய் புறப்பட்டார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், பிரதமர் மோடி உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார். மேலும் பிரதமர் மோடி 3 உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட் வந்தடைந்தார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "பிரதமர் நரேந்திர மோடி COP28 உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டிற்காக ஐக்கிய அரபு எமிரேட் வந்தடைந்தார். துணைப் பிரதமரும் ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சருமான ஷேக் சைப் பின் சயீத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்றார். கூடுதலாக WCAS இல் அவரது பங்கேற்பு, பிரதமர் உலகளாவிய தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார் மற்றும் காலநிலை நடவடிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பார்" என்று அரிந்தம் பாக்சி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் துபாயில் நடைபெற்ற சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் ஆகும். ஆனால் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது. மக்கள்தொகை குறைவாக உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைவு. காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து