முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      உலகம்
Germany 2023-12-03

Source: provided

பெர்லின் : ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தெற்கு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைங்கள் மூடப்பட்டன. இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

பேயர்ன் முனிசி- யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான முனிச்  மூடப்பட்டது. வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து