முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல் எதிரொலி: பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அலர்ட் விடுத்த பேரிடர் துறை

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Internet 2023 06 30

Source: provided

சென்னை : மிக்ஜாம்  புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மிக்ஜாம் புயலாக உருவாகி உள்ளது. 

இதன் எதிரொலியாக, பொதுமக்கள் யாரும் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரை பகுதிக்கோ, தேவை இல்லாமல் வெளியேவோ செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்திருந்தது. 

இந்நிலையில், மிக்ஜாம்  புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அந்த குறுஞ்செய்தியில், 

மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60- 70 கி.மீ., பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பொது மக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். 

மரங்கள், மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து