முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் : பார்லி.யில் திருச்சி சிவா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

சென்னை : மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. மழை, தற்போது ஓய்ந்துள்ளது. மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மிக்ஜம்' புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி.கள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மிக்ஜம் புயலால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என நேற்று மாநிலங்களவையில் எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து