முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் புதிய மடாதிபதி நாகராஜ் பொறுப்பேற்பு

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Kanchipuram 2024-02-07

Source: provided

காஞ்சி : காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது புதிய மடாதிபதியாக நாகராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

காஞ்சிபுரம் நகர் பெரிய காஞ்சிபுரத்தில் பரமசிவம் தெருவில் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடம் செயல்பட்டு வருகிறது. இம்மடத்தின் 233-வது மடாதிபதியாக இருந்து வந்த ஞானப்பிரகாச பராமாச்சாரிய நடராஜன் சுவாமிகள் உடல்நலக் குறைவால் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து மடத்தின் 234-வது மடாதிபதியாக மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த சண்முகசுந்தரம், மீனாட்சி தம்பதியரின் 2-வது குமாரர் நாகராஜ்(64) புதிய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் உலர் தாவர காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். முன்னதாக மடத்துக்கு முதல் முதலாக வருகை புரிந்த புதிய மடாதிபதிக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் மடத்தில் உள்ள மெய்கண்ட ஈஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடும், தீபாராதனைகளும் நடைபெற்றன.  இந்நிகழ்வின் போது புதிய மடாதிபதி தேர்வுக்குழுவின் தற்காலிகப் பொறுப்பாளர் என்.எஸ். ஆளவந்தார், ஆலோசனைக்குழு உறுப்பினர் குப்புச்சாமி, சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக நிர்வாகி தணிகை மணி, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சிவானந்தம், சிவனடியார் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து