முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் விபத்து: அமெரிக்க கடற்படை வீரர்கள் 5 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2024      உலகம்
Helicopter 2024-01-22

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை கிரீச் விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக சூப்பர் ஸ்டாலியன் ஹெலிகாப்டரில் கடற்படையினர், மரைன் கார்ப்ஸ் விமான நிலைய மிராமருக்கு சென்றனர். 

இந்த நிலையில் ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போனது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் புதன்கிழமை காலை 9:08 மணியளவில் கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில் மலையில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேஜர் ஜெனரல் மைக்கேல் ஜே. போர்க்சுல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஹெலிகாப்டர் பயிற்சியின் போது, 3டி மரைன் ஏர்கிராப்ட் விங் மற்றும் பறக்கும் புலிகள் பிரிவுகளை சேர்ந்த 5 சிறந்த கடற்படை வீரர்கள் உயிரிழந்ததை மிகவும் கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த சோகத்துடனும் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த கடற்படையினரின் உடல்கள் மற்றும் உபகரணங்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து