முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவாயூர் கோவில் வளர்ப்பு யானைக்கு இன்று நினைவு நாள்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Guruvayur 2024-02-11

Source: provided

பாலக்காடு : கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் தேவஸ்தான வளர்ப்பு யானைகளில் ஒன்றான பத்மநாபன் நினைவுநாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. 

குருவாயூர் தேவஸ்தானத்தின் வளர்ப்பு யானைகளில் முக்கிய தலைமையிடத்தில் பங்கு வகித்தது குருவாயூர் பத்மநாபன். கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் 4-வது ஆண்டு நினைவுநாள் இன்று காலை 9 மணிக்கு குருவாயூர் தேவஸ்தான விருந்தினர் மாளிகை முன்பாக அமைக்கப்பட்டுள்ள குருவாயூர் பத்மநாபன் உருவச்சிலை முன் அனுசரிக்கப்படுகிறது.

குருவாயூர் பத்மநாபன் உருவச் சிலைக்கு முன் தேவஸ்தான சேர்மன் டாக்டர் வி.கே.விஜயன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,தேவஸ்தான ஊழியர்கள், யானை பாகர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் மலர்அஞ்சலி செலுத்தவுள்ளனர். 

மேலும், கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் உருவச்சிலைக்கு முன் தேவஸ்தானத்தின் 5 வளர்ப்பு யானைகள் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அன்று குருவாயூர் பத்மநாபன் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து