முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் மொத்த செல்வமும் 2 சதவீத பணக்காரர்களிடம் உள்ளது: ராகுல் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Rahul 2024-02-11

Source: provided

ராய்ப்பூர் : நாட்டின் மொத்த செல்வமும் 2 சதவீத பணக்காரர்களிடம் தான் உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல்  பேசினார். 

 சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் - சம்பா மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட போது ராகுல் காந்தி பேசியதாவது,

நாட்டில் உள்ள தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். இந்த ஒப்பந்தத் தொழிலில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பழங்குடியினர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆனால் நாட்டின்  நீதிமன்றம் மற்றும் ஊடகம் போன்ற துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பழங்குடியினரை காண முடியாது. 

இந்த அநீதிக்கு எதிராக பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை துவங்கி உள்ளேன். பிரதமர் மோடி  ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விரும்பவில்லை. ஆனால் நான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவேன். 

இந்தியாவில்  சமூக நீதிக்கான மிகப் பெரிய புரட்சிகரமான நடவடிக்கை ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆகும். நாட்டின் மொத்த  செல்வமும் 2 சதவீத பணக்காரர்களிடம் தான் உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் நாட்டின் உண்மை வெளிவரும். 

அதனால்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த  பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் அனுமதிக்கவில்லை. மணிப்பூரில் மோதல் நிலவி வருகிறது. ஆனால்  பிரதமர் மோடி இதுநாள் வரை மணிப்பூருக்கு செல்லவில்லை. பா.ஜ.க. இரண்டு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை  பரப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டனர். மணிப்பூரில்  உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து