முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேர் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
Cort 2023 04 17

Source: provided

கோவை:பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு. அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் அதில் கூடுதல் ஆவணங்களை இணைத்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 30- க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சி.பி.ஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று 9 பேரும் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் குற்றவாளிகள் 9 பேர் முன்னிலையிலும் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டது.

கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்தனர். தற்போது சேலம் ஜெயிலில் உள்ள இவர்கள் ஒரு வருடத்திற்கு பின்பு கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து