முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: டெல்லியில் காங்.-ஆம் ஆத்மி தொகுதி உடன்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      இந்தியா
Kejrival 2024-01-05

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த சூழலில், இண்டியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன.  எனினும், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் பல இடங்களில் தொய்வு ஏற்பட்டு இருந்தது. இதே போன்று டெல்லியிலும் காங்கிரஸ் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.  

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் மற்றும் எம்.பி.யான முகுல் வாஸ்னிக் கூறும் போது, 

டெல்லி மக்களவைக்கு 7 தொகுதிகள் உள்ளன.  இதில், ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடும் என கூறினார். இதன்படி, ஆம் ஆத்மி கட்சியானது புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி என 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியானது சாந்தினி சவுக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு என 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன என்று அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து