முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலை யாத்திரையின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார் : திருப்பூர்-மதுரையில் பலத்த பாதுகாப்பு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
Modi 2023-08-21

Source: provided

திருப்பூர் : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் நடை பயண நிறைவு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பல்லடம் அருகே நடைபெறுகிறது. பாதயாத்திரை நிறைவு விழாவை பாராளுமன்றத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டமாக நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக சுமார் 1300 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பொதுக் கூட்ட மைதானத்தை மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் அவர்களது தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்களது அறிவுறுத்தல் படி, நேற்றும், இன்றும் , திருப்பூர் மாவட்ட எல்லையில் ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை பின்பற்றி ட்ரோன்களை கண்காணிக்கும் படி போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . இந்த பொதுக்கூட்ட பாதுகாப்பு பணிகளில் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 7ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவை முடித்து அதன் பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து இன்று மதுரை செல்கிறார். இதனைத்தொடர்ந்து மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் ‘டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஃபார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.’ என்ற தலைப்பில் சிறு, குறு, நடுத்தர வர்த்தக தொழில் அதிபர்கள் கலந்து கொள்ளும் டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் இயங்க உத்தரவிட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 27 ஆம் தேதி) இரவு மதுரையில் தங்கும் மோடி 28-ம் தேதி காலை தூத்துக்குடி செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து