முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி விண்ணப்பத்தாரர்கள் நேரில் வாங்க முடியாது: ஓட்டுநர் உரிமம் தபாலில் மட்டுமே அனுப்பப்படும் : தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : ஓட்டுநர் உரிமத்தை விண்ணப்பத்தாரர்கள் நேரில் வாங்க முடியாது என்றும், தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஓட்டுநர் உரிமத்தை விண்ணப்பத்தாரர்கள் நேரில் வாங்க முடியாது என்றும், தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், விரைவு அஞ்சல்மூலம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமத்தை நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்றும், தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திரும்ப வந்துவிடும், பின்னர் சரியான முகவரியுடைய தபால் உறையை விண்ணப்பத்தாரர்கள் தந்தால் பின்னர் ஓட்டுநர் உரிமம் தபாலில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து