முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு தேசத்தில் இணைந்தார் ஒய்.எஸ்.ஆர். காங். எம்.எல்.ஏ.

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      இந்தியா
Vasantha-Krishna-Prasad 202

Source: provided

ஐதராபாத் : ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின்  எம்.எல்.ஏ.வான வசந்த கிருஷ்ணா பிரசாத் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 

ஆந்திர மாநிலம் எம்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள மைலவரம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இருந்தவர் வசந்த கிருஷ்ணா பிரசாத்.  நேற்று அவர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கு தேசத்தில் இணைந்துள்ளார்.

தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த கிருஷ்ணா, தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கு தேசத்தில் இணைந்தார்.

இது குறித்து கிருஷ்ணா கூறுகையில், ஆந்திரவை வளர்ச்சியை நோக்கிச் செல்லவும், தொழில்களை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நாயுடுவுக்குத் திறன் உள்ளது. 

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்த போது மைலவரம் தொகுதியின் வளர்ச்சிக்கான அங்கீகாரம் மற்றும் நிதி இல்லாததால் பெரும் ஏமாற்றம் கிட்டியதாகவும், பல கோரிக்கைகளை முன்வைத்தும், தொகுதியின் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. 

தனது தொகுதிகளுக்கு சேவை செய்ய வேண்டும் மற்றும் ஆந்திரவின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதால் தெலுங்கு தேசத்தில் இணைந்தேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து