முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி: மே.வங்கத்தில் திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      இந்தியா
Tapas-Roy 2024-03-04

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தபாஸ் ராய் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து, நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். 

அதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தபாஸ் ராய் கூறியதாவது, 

சட்டமன்ற சபாநாயகரிடம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளேன். நான் இப்போது சுதந்திர பறவையாக இருக்கிறேன் என்று கூறினார். 

மேலும், ஜனவரி மாதம் தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது, கட்சித் தலைமை தன்னுடன் நிற்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளது மேற்கு வங்காளம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து