முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெவர் எஸ்கேப் இசை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
Never-Escape 2024-04-02

Source: provided

Royal B Productions சார்பில் நான்சி ப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில், புதுமுக  நட்சத்திரங்கள் நடிப்பில், "நெவர் எஸ்கேப்". விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும்  பத்திரிக்கையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் அரவிந்த் ராஜ் பேசியதாவது..

இது தான் என் முதல் மேடை.  தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. இந்தப்படத்திற்காக நிறைய தயாரிப்பாளர்களை அணுகினோம். இறுதியில் ஆல்பர்ட் சார் கதை கேட்டவுடனே ஒத்துக்கொண்டார். இப்படம் ஒரு வித்தியாசமான ஹாரர் திரில்லர், ஹாரரில் காமெடி, மிஸ்டரி என நிறைய கதைகள் வருகிறது ஆனால் இந்தப்படம் வித்தியாசமாக இருக்கும். கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் என் நண்பர்கள்,  படத்தில் ஒன்றாக இணைந்து உழைத்துள்ளோம். ராபர்ட் மாஸ்டர் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்துள்ளார். மிக நல்ல வேடம் செய்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து