முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கத்துறையால் கைதான டெல்லி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு 6 மாதங்களுக்கு பிறகு ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      இந்தியா
Sanjay-Singh 2024-04-02

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன.  

இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் சிங், டெல்லி முதல்வர்  கெஜ்ரிவால் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள்  தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி எம்.பி சஞ்சய் சிங், தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை ஆட்சேபம் எதுவும்  தெரிவிக்கவில்லை.  

இதையடுத்து, சஞ்சய் சிங்கிற்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்தது. மேலும், இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது. 

டெல்லி எம்.பி. சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது  செய்யப்பட்டார்.  நீதிமன்ற காவலில் ,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சஞ்சய் சிங்கிற்கு  6 மாதங்களுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து