முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் : பி.சி.சி.ஐ. திடீர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரண்டு போட்டிகளுக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. மாற்றியமைத்துள்ளது.

2 போட்டிகள்...

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி ஒரு நாள் முன்னதாக (ஏப்ரல் 16) நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டிக்கான அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கான அட்டவணை திருத்தத்துக்கான காரணம் எதுவும் பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ராம நவமியின்... 

ராம நவமியின் காரணமாக போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதற்கான எந்த ஒரு காரணத்தையும் பி.சி.சி.ஐ. தெரிவிக்கவில்லை. ஐ.பி.எல். அட்டவணை திருத்தம் தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 17 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேய நடைபெறவிருந்த போட்டி ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 16 ஆம் தேதி அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் மற்றும் தில்லி அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து