முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் நலமாக உள்ளார்: திகார் சிறை நிர்வாகம் விளக்கம்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      இந்தியா
Kejrival

புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நிலை நன்றாக உள்ளார் என்று டெல்லி திகார் சிறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். மேலும் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கெஜ்ரிவாலின் உடல் தற்போது மோசமடைந்துள்ளதாகவும், அவர் 4.5 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் டெல்லி அமைச்சர் அதிஷி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் கெஜ்ரிவாலின் உடல் நிலை குறித்து திகார் சிறை நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நிலை நன்றாக உள்ளார். சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அவரின் உடல் எடையில் எவ்வித மாற்றமும் இல்லை. அவரின் ரத்த சர்க்கரையின் அளவும் இயல்பாக உள்ளது.  அவர் காலையில் யோகா மற்றும் தியானம் செய்கிறார்.  

ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாடு இருக்க அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.  அவரின் சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திகார் சிறையின் எண் 2-ல் உள்ள அறையில் கெஜ்ரிவால் வைக்கப்பட்டுள்ளார்.  முதல்வருக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்படுகிறது. 

உடல்நிலை சார்ந்த அவசர சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளது. கெஜ்ரிவாலின் மனைவி நேற்று முன்தினம் அவருடன் உரையாடினார். ஏப்ரல் 1-ம் தேதி கெஜ்ரிவாலை 2 மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது உடல் எடை 65 கிலோ இருந்தது. இவ்வாறு  திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து