முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: சாகு பேட்டி

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
Satyaprata-Saku

சென்னை, தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 6.32 கோடி வாக்காளர்களில் நேற்று முன்தினம் வரை 4.36 கோடி வாக்காளர்களுக்கு அதாவது 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. சி.விஜில் செயலி மூலம் இதுவரை 3605 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 

74.52 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தபால் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி திருச்சியில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த மையம் தபால் வாக்கிற்கு என அமைக்கப்படும். அங்கிருந்து தபால் வாக்குகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும்.

எடுத்துக்காட்டுக்கு சென்னையில் பணிபுரியும் ஒருவரின் வாக்கு கன்னியாகுமரியில் இருந்தால் சென்னையிலிருந்து ஒரு அதிகாரி கன்னியாகுமரிக்கு சென்று அந்த தபால் வாக்கு சீட்டுகளை அளித்துவிட்டு வருவார். 

தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்தும் ஒருங்கிணைந்த மையமான திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

பெரும்பாக்கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் அளிக்க எந்தவித தடையும் இல்லை. 

தொடர்ச்சியாக செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் எந்தவித அனுமதி பெற தேவையில்லை.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து