முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      ஆன்மிகம்
Chathuragiri 2023 07-17

Source: provided

விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது. 

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களையொட்டி தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

நேற்று முதல் வருகிற 8-ம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர். 

அவர்கள் தங்களை விரைவாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறியதையடுத்து காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகளை சோதனை செய்யப்பட்டது. 

அப்போது பாலித்தீன் கேரிபை, பீடி, சிகரெட், மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என வனத்துறையினர் சோதனை செய்த பின்பு பக்தர்கள் அனுமதித்தனர். 

அதை தொடர்ந்து நேற்று மாலை சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 

நேற்று காலை வெயில் இல்லாத நிலையில் பக்தர்கள் வேகமாக மலையேறிச் சென்றனர். வெயில் தாக்கம் காரணமாக விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்த நிலையிலே காணப்பட்டது. 

வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை  சித்திரை மாத அமாவாசை தினத்தன்றும் பக்தர்கள் அதிகம் வர வாய்ப்பில்லை என்று வனத்துறையினர் கூறினர். 

கோவிலுக்கு செல்கின்ற வழியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்க சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து