முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 13 மே 2024      விளையாட்டு
Dhoni 2024-05-13

Source: provided

சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.

சென்னை வெற்றி...

ஐ.பி.எல். 2024 தொடரில் (மே 12) நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. ஐ.பி.எல். தொடரில் ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

50-வது வெற்றி..

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 52 வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 ஆவது வெற்றியை பெற்றுள்ளது. சேப்பாக்கத்தில் 50 ஆவது வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து