முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 18 மே 2024      இந்தியா
Ananda-Bose 2024-05-03

Source: provided

 கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்க கவர்னர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கவர்னர் ஆனந்த போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆன்ந்த போஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இந்நிலையில், புகார் அளித்த பெண்ணை கவர்னர் மாளிகையில் கட்டுப்படுத்த முயன்றதாகவும், போலீசில் புகார் அளிக்கவிடாமல் நிறுத்தியதாகவும், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேர் மீது ஹாரே போலீஸ் ஸ்டேஷனில் ஐ.பி.சி 341 மற்றும் 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கவர்னரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து