முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனார் மனைவியிடம் ஆசி பெற்ற சுரேஷ்கோபி

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      அரசியல்
Suresh-Gopi--2024-06-13

திருவனந்தபுரம், கேரளாவில் முன்னாள் முதல்வர் ஈ.கே. நாயனாரின் மனைவி மனைவி சாரதாவிடம் நடிகர் சுரேஷ் கோபி ஆசி பெற்றார். 

கேரளாவில் பாரதிய ஜனதா சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ்கோபி. மத்திய இணை அமைச்சர் பதவியேற்ற இவர், டெல்லியில் இருந்து கேரளா திரும்பியதும் கோழிக்கோடு தாலி கோவில், பழையாங்கடி மாடைக்காவு கோவில் மற்றும் பரசினிக்கடவு கோவில்களுக்குச் சென்றார்.

தொடர்ந்து அவர், கண்ணூர் கல்லியசேரியில் உள்ள முன்னாள் முதல்வரும், சி.பி.எம். தலைவருமான ஈ.கே.நாயனார் வீட்டுக்குச் சென்றார். அங்கு நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார். 

சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டார். இது தொடர்பாக சாரதா கூறுகையில், 

சுரேஷ்கோபி, நாயனாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். பலமுறை இங்கு வந்துள்ளார். கண்ணூர் வரும்போதெல்லாம், எனக்கு போன் செய்து அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என கூறுவார். 

இப்போது அவர் பழைய சுரேஷ் இல்லை. மிகவும் பிசியாக இருக்கிறார். அவர் என்னை பார்க்க வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து