Idhayam Matrimony

பாராளுமன்ற சபாநாயகர் பதவி: பா.ஜ.க. பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு ஆதரவு : நிதிஷ்குமார் கட்சி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      இந்தியா
nitish-kumar

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜகவால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆதரிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவிக்கையில்., “ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேச கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக யாரை பரிந்துரைக்கிறதோ அவரை நாங்கள் ஆதரிப்போம்” எனத் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படலாம் என பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.சி. தியாகி, “கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை பாஜகதான் வழிநடத்துகிறது” எனத் தெரிவித்தார். இதன்மூலம், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.

18-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. மத்திய பட்ஜெட்டின்போது, மக்களின் கோரிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் நாங்கள் விவாதிப்போம் என்று கே.சி. தியாகி தெரிவித்தார். “பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறும். ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதியின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், பிரச்சினைகள் ஆகியவற்றை பாராளுமன்றத்தில் எழுப்புவார்கள்” என கே.சி. தியாகி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து