முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      தமிழகம்
Stalin 2022 12 29

Source: provided

சென்னை : சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மையை எடுத்துக் காட்டுகின்றன. சமுதாயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். 

மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது.தேசிய தேர்வு முகமைக்கு  மத்திய கல்வி மந்திரி ஆதரவாக பேசியுள்ள போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமான படத்தை வரைகின்றன. 

பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளுக்காக ஓ.எம்.ஆர். தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

தியாகி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து