முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 லட்சம் பேர் பார்வையிட்ட அபுதாபி இந்து கோவில்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      உலகம்
Dhabi-Hindu-Temple

அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள இந்து கோயிலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.

அபுதாபி இந்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபியில் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஆன்மீக சோலை என போற்றப்படும் மணற்கல் ஆலயம் உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் நடப்பு ஆண்டின் ஜூன் 14-ந் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவில் திறக்கப்பட்டு இதுவரை வருகை புரிந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.

10 லட்சம் பேரின் பிரார்த்தனைகள், இதயங்கள், நம்பிக்கைகள், அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கதைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். தற்போது இந்த ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை காண வருபவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. விடுமுறை நாட்களில் சுவாமி தரிசன நேரம் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து