முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் நம்பிக்கையை ஆவின் நிறுவனம் பெற்றுள்ளது: தமிழ்நாடு அரசு பெருமிதம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      தமிழகம்
Aavin logo

சென்னை, பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்குகிறது ஆவின் நிறுவனம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கவும், அதன் மூலம் பால் உற்பத்தியினைப் பெருக்ககுவதையும் நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக மக்களின் மனதில் பதிந்திருக்கும் ஆவின் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான முறையிலும் நேர்த்தியான முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளில் கையொப்பமிட்ட 7 அறிவிப்புகளில் ஆவின் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டதும் ஒன்றாகும். கடந்த 3 ஆண்டுகளில் பால் கொள்முதல் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துதல், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆவின் பாலை குளிரூட்டும் வகையில் சேமிப்புக் கிடங்குகளை அமைத்தல், ஆவின் நெய், ஐஸ்கீரிம்,யோகார்ட்,  பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ். டெய்ரி ஓய்ட்னர். 40 நாட்கள் வரையில் கெட்டுக் போகாமல் இருக்கும் பதப்படுத்தப்பட்ட பால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆவின் பால் பவுடர் உற்பத்தியை அதிகரித்தல். பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை அவ்வப்போது உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக. 31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஆவின் நிறுவனம் 43.05 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.மேலும் பால் கொள்முதலை அதிகரிக்கும் பொருட்டு உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயிலிருந்து 35 ஆகவும், எருமைப் பாலின் விலை லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 44 ஆகவும், உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2024 வரையான காலத்திற்கு 108.30 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாகப் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களும் பயனடைந்து வருகின்றனர்.

 

இப்படியான நிலையில் திமுக ஆட்சியில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் 4.57 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று ஆவின் நிறுவனம் சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து