Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி சம்பவம்: விஷ சாராயம் விற்ற 3 பேர் கைது

வியாழக்கிழமை, 20 ஜூன் 2024      தமிழகம்
Jail

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷ சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

1000 போலீசார் கிராமம் கிராமமாக சென்று சல்லடை போட்டு சாராய கும்பலை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். விஷ சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான கண்ணுக்குட்டி என்ற கோவிந்தசாமி, தாமோதரன் மற்றும் விஜயா என்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணி யில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து விஷ சாராய கும்பலை கூண்டோடு கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மேலும் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதால் விஷ சாராய கும்பலை சேர்ந்த அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து