முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் மழைக்கு நடுவே இந்திய தூதரகத்தில் நடந்த யோகாசன நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      உலகம்
Japan 2024-06-21

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழைக்கு நடுவே இந்திய தூதரகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. 

யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் நேற்று யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  அந்த வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய தூதரகத்தின் சார்பில், அங்குள்ள சுக்ஜி ஹாங்வான்ஜி கோவிலில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதன்படி நேற்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் ஜப்பான் மக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மழை பெய்ய தொடங்கியதால், அங்கு வந்திருந்தவர்கள் குடைகளை பிடித்தவாறு யோகாசனம் செய்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து