Idhayam Matrimony

சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது: அமைச்சர் துரைமுருகன் கருத்து

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      தமிழகம்
Durai-Murugan 2024-06-21

சென்னை, தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் 2-ம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினரை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.

இந்த சூழலில் சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது., கேள்வி நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த விவகாரமாக இருந்தாலும் கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் பிரச்சினைகள் குறித்து அவையில் எழுப்ப வேண்டும். யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். கள்ளச்சாராயம் குறித்தோ, ஆட்சி குறித்தோ கேள்வி கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. வருந்தத்தக்கது." இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து