முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துஜா குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு சிறை தண்டனை

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      உலகம்
Hinduja 2024-06-22

Source: provided

ஜெனிவா : சட்டவிரோதமாக வேலையாட்களை பணியமர்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்துஜா குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு சிறை தண்டனை வழங்கி சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமம். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் , இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.

ஆட்டோமொபைல், வங்கி, ஐ.டி., சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் இந்துஜா குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் பல்லாயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 

37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்கள். 

இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணியமர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்ய மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் (ரூ.2,217) செலவு செய்கின்றனர். அதே சமயம், வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் (ரூ.660) மட்டுமே வழங்குகின்றனர். 

ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர் என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுவிட்சர்லாந்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அதில் இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது தொடரப்பட்ட மனித கடத்தல் தொடர்பான வழக்கை மட்டும் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து