முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முறைகேடு: நாளை நடைபெறவிருந்த தி.மு.க. மாணவரணியின் போராட்டம் ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      தமிழகம்
DMK-Offces 2023 03 31

சென்னை, நீட் முறைகேட்டை கண்டித்து நாளை 24-ம்  தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. மாணவரணி அறிவித்துள்ளது

நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில்  முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து  (நாளை)24-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நீட் முறைகேட்டை கண்டித்து  நாளை 24-ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தி.மு.க. மாணவரணி அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து