முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவசியமில்லை: அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      தமிழகம்
Raghupathi 1

சென்னை,  கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ விவகாரத்தில் வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

விஷ சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வருந்தத்தக்கது. யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதை கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவையில் ஏதாவது பிரச்சினை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே எதிர்கட்சி தலைவர் பழனிசாமி இல்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடக்க முயற்சித்து வருகிறார். அவர் எங்களுக்கு சட்டப்பேரவையில் பேச அனுமதி தரவில்லை என கூறுகிறார். ஆனால் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் அழைத்து தங்களது கருத்துக்களை பேசுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என சட்டப்பேரவை தலைவரிடம் கேட்டார். 

எனவே அ.தி.மு.க.வுக்கு பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை என்பது அப்பட்டமான பொய்யாகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என தப்புக் கணக்கு போட்டிருக்கிறார்கள். மக்களவை தேர்தல் தோல்வியை மறைப்பதற்கு அ.தி.மு.க.வினர் எத்தனை முயற்சி எடுத்தாலும் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்ட முதல்வர் எதிர்க்கட்சிகளை மதிக்க கூடியவர் என்பதை கடந்த 2 நாட்களாக நிரூபித்து இருக்கிறார்.

அதே போல சட்டப்பேரவை தலைவரும் கூட எதிர்கட்சி தலைவர் எந்த கருத்தையும் சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று தான் கூறினார். காரணம் கேள்வி நேரத்தில் யாரும் எந்த பிரச்சினை குறித்து பேசுவது கிடையாது. அதைத் தொடர்ந்து ஜீரோ ஹவரில் தான் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

ஆனால் கேள்வி நேரத்தை வேண்டும் என்றே கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்டப்பேரவை தலைவரின் இருக்கையையும் முற்றுகையிட்டனர். இருந்தபோதும் அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதே தவிர வாய்ப்பு மறுக்கப்படவில்லை.

கேள்வி நேரம் முடிந்த பின்பு அவையை ஒத்திவைத்து இப்பிரச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்புண்டு. ஆனால் கேள்வி நேரத்திலேயே விவாதிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அ.தி.மு.க.வினர் வேண்டுமென்றே கலாட்டா செய்வதற்காக இவ்வாறு செய்கின்றனர். மக்கள் மன்றத்தில் தோற்றதால், சட்டப்பேரவையில் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார். 

அதை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, 

எதற்கு சி.பிஐ. விசாரணை. இதற்கு முன்னர் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கிறது. பண்ருட்டியில் நடந்த சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணையா நடத்தினர்?. அன்றைக்கு நீதி விசாரணை கமிஷன் அமைத்தார்களா? ஆனால், தி.மு.க. அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணை, கமிஷன், உடனடியாக நிவாரணம் வழங்கியுள்ளது. இதில் எதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்?

சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார். ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறினார். 

இதனால்தான், தி.மு.க. அன்றைக்கு சி.பி.ஐ. விசாரணை கோரியது. காவல் நிலையத்தில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டதை முதல்வராக இருந்த எடப்பாடி மறைக்க பார்த்ததால், நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். 

ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து