முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றம் உத்தரவை அடுத்து கன்னட நடிகர் தர்ஷன் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      சினிமா
Darshan 2024-06-22

Source: provided

பெங்களூரு : நீதிமன்றம் உத்தரவை அடுத்து கன்னட நடிகர் தர்ஷன் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான தா்ஷன் தூகுதீபா மற்றும் நடிகை பவித்ரா கௌடா உள்பட 17 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளைப் பதிவிட்ட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசுவாமியை, நடிகர் தர்ஷன் தூகுதீபா, அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான பவித்ரா கௌடா உள்ளிட்டோர் கடத்திக் கொலை செய்த வழக்கில் நடிகா் தா்ஷன் தூகுதீபாவை ஜூன் 11-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடகத்தில் ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கைதாகியுள்ள தர்ஷனும் அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்டோர் கடந்த சில நாள்களாக அவர்கள் காவல்துறையின் விசாரணை வளையத்துக்குள் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை(ஜூன் 22) பெங்களூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையில், தர்ஷன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பிரதோஷ், வினய், தன்ராஜ் ஆகிய நால்வரையும் ஜூலை 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து