முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவற்றுக்கெல்லாம் ஜி.எஸ்.டி. விலக்கு? மத்திய நிதியமைச்சர் விளக்கம்

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      இந்தியா
GST 2023-03-01

புதுடெல்லி, எவற்றுக்கெல்லாம் ஜி.எஸ்.டி. விலக்கு என்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 53-வது ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது, ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜி.எஸ்.டி.) விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், ரயில் நிலைய நடைமேடைகளில் பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட சேவைளுக்கும் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்கும் விடுதிகளுக்கும் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக அவர்களின் வசதிக்காக கல்வி நிலையங்களைத் தவிர்த்து, வெளியில் செயல்படும் மாணவர் விடுதிகள் மற்றும் மாணவர்களுக்காக செயல்படும் உணவகங்கள் ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு நபருக்கு ரூ. 20,000 வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு இந்த வரி விலக்கு பொருந்தும். மேற்கண்ட மாணவர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு அங்கு தங்கியிருப்பதும் கட்டாயம்.

பால் வணிகர்கள் பயனடையும் வகையில், அனைத்து பால் கேன்களுக்கும் ஒரே சீராக 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட வேண்டுமெனவும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுமென தெரிவித்துள்ளார். சிறு, குறு வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில், ஜி.எஸ்.டி. வரி திருப்பிச் செலுத்துதல் - 4ஆம் படிவத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30இல் இருந்து, ஜூன் 30 வரை நீட்டிக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளதாகவும், 2024-25 நிதியாண்டு முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து