முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு தங்கம்

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      விளையாட்டு
INDIA 2024-06-22

Source: provided

துருக்கியில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-3) நடைபெற்றது. இதில் காம்பவுண்ட் பிரிவில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி உலகக் கோப்பை ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிசில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.

______________________________________________________________________________

இன்னும் 25 ரன்களே....

டி20 உலகக் கோப்பைத் தொடரில் 2009 ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்தே டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய வீரர்களான விராட் கோலி (1170 ரன்கள்), ரோஹித் சர்மா (1039 ரன்கள்) மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேலா ஜெயவர்த்தனே (1016 ரன்கள்) மட்டுமே ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளனர். 

இவர்களது வரிசையில் இடம்பெற டேவிட் வார்னருக்கு இன்னும் 25 ரன்களே தேவைப்படுகின்றன. சூப்பர் 8 சுற்றில் அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுக்கும்பட்சத்தில், டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

______________________________________________________________________________

ஸ்டெயின் சாதனை முறியடிப்பு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அன்ரிச் நோர்ஜே ஒரு விக்கெட்டை எடுத்தபோது அவர் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா வீரரான டேல் ஸ்டெய்ன், டி20 உலக கோப்பை போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இருந்தார். தற்போது நோர்ஜே 31 விக்கெட்டுகளுடன் அவரை முந்தியுள்ளார்.

இந்த போட்டியில், அன்ரிச் நோர்ஜே 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 உலகக் கோப்பையில் அன்ரிச் நோர்ஜே 16 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டேல் ஸ்டெய்ன் 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும், ரபாடா 19 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். 4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

______________________________________________________________________________

நழுவிய கவுதம் காம்பீர்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை போட்டிகளுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு மாற்றாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தன்னை சிறந்த பயிற்சியாளராக நிரூபித்துள்ளார் காம்பீர். கடந்த 2018 இல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களிலின் ஆட்டம் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பவராக உள்ளார்.

இந்நிலையில்தான் அணியின் வீரராக இருந்த காலத்தில் எம்.எஸ்.டோனி, அணில் கும்ப்ளே ஆகியோரின் கேப்டன்சியில் விளையாடியுள்ள்ள கவுதம் காம்பீரிடம் யாருடைய கேப்டன்சி சிறந்தது என்று சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த காம்பீர், இது மிகவும் சர்ச்சைக்குரிய கேள்வி, இதற்கு பதிலளித்து நான் தலைப்புச் செய்தியில் வர விரும்பவில்லை. ஒவ்வொருவரிடமும் அவரவருக்கேயான பலங்களும் பலவீனங்களும் இருக்கும் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்துவிட்டு நழுவியுள்ளார். 

______________________________________________________________________________

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் காட்டம்

நடப்பு தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 24 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். எனவே அவரை மீண்டும் 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும் என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய ரசிகர்களும் வல்லுனர்களும் விராட் கோலியின் பார்ம் குறித்து கவலைப்படுவதை நிறுத்தவேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் பேசியதாவது:

விராட் கோலி பார்மில் இருக்கிறாரா, இல்லையா என்பதை பற்றி யோசிப்பதை நிறுத்துங்கள். இந்திய கிரிக்கெட்டை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன். ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அசத்துவதை போல், பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 விதமான சூழ்நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார். அதாவது அமெரிக்காவை விட அவர் இங்கே இன்னும் சிறப்பாக செயல்படுகிறார். உலகின் இதர தலைசிறந்த பவுலர்களுக்கும் பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் பும்ராவை வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து