முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      இந்தியா
Kashmir

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.  

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.  வடக்கு காஷ்மீரின் உரி செக்டரில் உள்ள கோஹல்லான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் சந்தேகத்திற்கிடமான நேற்று முன்தினம்  இருவர் நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். 

அப்போது பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகளின் சடலங்கள் எல்லைக்கு அருகில் கிடந்ததால் பாதுகாப்புப் படையினரால் மீட்க முடியவில்லை.

உரி செக்டார் பகுதியில் நேற்று  ஒரு பயங்கரவாதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு பயங்கரவாதியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து