முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற நடிகர் லாரன்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      சினிமா
Rajini 2024-06-23

Source: provided

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில்   ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்,  மாற்றம் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ வைரலானது.  அந்த வீடியோவை லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஹாய் ஸ்வேதா, கவலைப்படாதே, இன்றிலிருந்து நீ என் சொந்த குழந்தை, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன்.  இரண்டு நாட்களில் உங்களை சந்திப்பேன் என பதிவிட்டு இருந்தார். 

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில்   ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்,   

தலைவர் சூப்பர் ஸ்டாரை மாற்றம் அமைப்பிற்காக ஆசிகளைப் பெற சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றும். குருவே சரணம் என்றும்  ரஜினிகாந்துடன் உள்ள தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து